தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடையாறு ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலம்! - Adyar river Male body floating

சென்னை: அடையாறு ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை, தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர்.

அடையாறு
அடையாஅடையாறுறு

By

Published : Dec 4, 2020, 5:57 PM IST

சென்னை புறநகர்ப் பகுதிகளில் இரண்டு நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருவதால், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் சிலர், அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதந்துவருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ஆற்றில் மிதந்துசென்ற சடலத்தைப் பின்தொடர்ந்த தீயணைப்புத் துறையினர், திருநீர்மலை அருகே கரை ஒதுங்கிய உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details