தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினுக்கு மலேசிய அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து - Malaysian Human Resource Development Minister Datuk Seri Saravanan congratulates DMK leader MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

By

Published : May 2, 2021, 6:39 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிகமான தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மலேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!.

வளரட்டும் தமிழ்நாடு, தொடரட்டும் கருணாநிதியின் சகாப்தம்!" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூரில் முன்னிலை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details