சென்னை:பழம்பெரும் பாடகி வாணி ஜெயராமின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும், இசை உலகிற்கும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் வாணி ஜெயராம் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார். அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் தயாராகி வரும் 'மலை' படம் தான் அவர் கடைசியாக பாடிய படம். வாணி ஜெயராம் மறைவுக்கு படக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு, மற்றும் லஷ்மி மேனன் நடிப்பில் இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தின் இசை விழாவுடன், "பத்ம பூஷன்" விருது அறிவிக்கப்பட்ட வாணி ஜெயராமை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழாவும் நடத்த திட்டமிட்டு இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘மலை’ படக்குழுவினர் இரங்கல் இமான் இசையில் அவர் பாடிய பாடல் உள்ளத்தை வருடும் படியும், வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும், இந்த பாடலை அவருக்கு காணிக்கையாக்குவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாணி ஜெயராம் மறைவு: இருள் சூழ்ந்தது இசை உலகம்.! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்..