விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த சித்தேரிகரை சாலாமேடு லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைக்குறவர் சமூகத்தினர் வசித்துவருகிறார்கள். இவர்களது, பிள்ளைகள் கல்வி கற்க சாதிச்சான்றிதழ் அவசிமாக இருக்கிறது. ஆனால், கடந்த 7ஆண்டுகளுக்கு மேலாக போராடியும் இச்சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் சேர்க்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆறுமாணவிகளை சேர்க்க முயன்றபோது, அங்கு சாதி சான்றிதழ் இல்லாமல் அனுமதிக்கப்படமாட்டாது எனக்கூறிய நிலையில் பள்ளி வாசலில் அந்த ஆறு மாணவிகள் இந்து மலைக்குறவன் என சாதிச் சான்றிதழ் வழங்கிட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.