சென்னை: உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பறையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது.
இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலை "மக்கள் செல்வன்" நடிகர் விஜய் சேதுபதிக்கு அளிக்கப்பட்டது. தலைவர்கள், அறிஞர்கள், பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் மிகப்புகழ்பெற்ற நிறுவனம் SILAII(சிலை) நிறுவனம் ஆகும்.
நம் மனித இனத்திற்கு உலகப்பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தத்துவஞானி "திருவள்ளுவர்" சிலையை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர் குறள் வழி வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவரது கருத்துக்களைப் பின்பற்ற வைக்கலாம் எனும் முயற்சியாகச் சிலை நிறுவனம் 'இல்லம் தோறும் வள்ளுவர்' திட்டத்தை முன்னெடுத்துள்ளது.