சென்னை : இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”1968 இல் மோசமாக இருந்த தமிழ்நாட்டின் நிதிநிலையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு" என்கிற முழக்கத்தோடு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான அப்போதைய திமுக அரசால் நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வரப்பட்ட லாட்டரி சீட்டு முறை பேராசைக்காரர்களின் பிடியில் சிக்கி "ஒரு நம்பர் லாட்டரி", "சுரண்டல் லாட்டரி" என பல பரிமாணங்கள் அடைந்துள்ளது.
தினக்கூலி தொழிலாளர்களிடமும், ஏழை, எளிய, நடுத்தர மக்களிடமும் ஒரே சீட்டில் லட்சாதிபதிகளாக, கோடிஸ்வரர்களாகி விடலாம், நமது ஏழ்மை நிலை காணாமல் போகும், அதனால் ஏழைகள் வாழ்வில் விடியல் பிறக்கும் என்கிற பேராசையை தூண்டி விட்டதால் அதனை நம்பி ஏமாந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தன.
லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்த ஜெயலலிதா
மேலும் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் கூட தமிழ்நட்டில் அரங்கேறின என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர்கள் நல அணியின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்களின் வருமானத்தையும், உயிரையும் காவு கேட்கிற திட்டமாக லாட்டரி சீட்டு முறை மாறிப் போனதால் 2003இல் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு அனைத்து மாநில லாட்டரி பரிசு சீட்டு விற்பனைக்கும் தமிழ்நாட்டில் முற்றிலுமாக தடை விதித்தது.
கொளுத்திப் போட்ட கார்த்திக் சிதம்பரம்
இந்நிலையில் பத்தாண்டு கால இடைவெளியில் மீண்டும் அரியணை ஏறியுள்ள திமுக அரசு தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர அதனை அரசே அச்சடிப்பதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே அரசு அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் புலம்பிக் கொண்டிருந்த நிலையில் அதற்கு அடித்தளமிடும் வகையில் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் கார்த்திக் சிதம்பரம் மக்கள் நலனை மறந்து தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வர வேண்டும், அதனை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கொளுத்திப் போட்டிருக்கிறார்.
நிதியமைச்சரின் விரோத செயல்