தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் வியூகம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆலோசனை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தேர்தல் வியூகம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று (பிப்.01) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம்

By

Published : Feb 1, 2022, 8:59 PM IST

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை, தனித்துப் போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யமும் பெரிய கட்சிகளுக்கு இணையாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒட்டுமொத்தமாக உள்ள 12ஆயிரத்து 838 இடங்களில் இதுவரை 7 கட்டங்களாக சுமார் 800க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நேரடிப் பரப்புரை மேற்கொள்வது குறித்தும், தேர்தல் வியூகம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.01) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டு வந்தாலும் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரடி பரப்புரை செய்யவுள்ளதாகவும்; பிப்ரவரி 4ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவுக்குப் பின்னர், 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை, 10 நாள்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:காவல் துறையினர் எதுக்கு இருக்கீங்க? - விளாசிய ஆணையர் ரவி

ABOUT THE AUTHOR

...view details