தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 தீர்மானங்களோடு முடிந்த மக்கள் நீதி மையத்தின் செயர்குழு கூட்டம்! எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன? - ஆழ்வார்பேட்டையில் மநீம கட்சியின் செயற்குழு கூட்டம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் முதல் ஆளுநர் அதிகார வரம்பு மீறல்கள் என ஒன்பது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

மநீம செயர்குழு கூட்டம்
மநீம செயர்குழு கூட்டம்

By

Published : Jul 7, 2023, 10:30 PM IST

சென்னை:ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கோயம்புத்தூர், தென் சென்னை, மதுரை ஆகிய பாராளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் நலன்களுக்கான செயல்பாடுகளையும், செயல்திட்டங்களையும் மக்கள் மத்தியில் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் மதிப்புமிக்க பங்களிப்பினைச் செய்ய ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிக்க களவீரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப, இந்தியப் பிரதமர் அங்கு நேரில் சென்று சுமுகமான தீர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை இன்னும் வலுப்படுத்தும் விதமாக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு. அதன்படி, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவார்கள் என்றும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார் பணிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொழில்முனைவோர் அணி மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் இந்த அணியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர் குழு அமைக்கப்படுவதாகவும். தமிழக மீனவர்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து களமாடி வருகிற கட்சி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல் படி, மக்கள் நீதி மய்யம் கட்சியில் மீனவர் அணி உருவாக்கப்படும் என்றும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த அணியின் மாநிலச் செயலாளராக இரா.பிரதீப் குமார் நியமிக்கப்படுவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக தனது அதிகார வரம்புகளை மீறி செயல்படுவது ஏற்புடையதல்ல, மாநில அரசின் வளர்ச்சி பணிகளை, நலத்திட்டங்களை, கொள்கை முடிவுகளை தாமதிப்பதால், நிராகரிப்பதால் பாதிக்கப்படுவது தமிழ்நாடு மக்கள் தான்.

தனது பொறுப்பையும், தான் வகித்து வரும் பதவியின் கண்ணியத்தையும் உணர்ந்து ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் ஆளுநர் கடமையாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் நீதி மையத்தின் இந்த நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், ம.நீ.ம தேர்தலுக்கு தாயாராவதை காட்டுகிறது. மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு, மநீம கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தங்களின் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி? - யார் யாரெல்லாம் தகுதியுடைவர்கள்?

ABOUT THE AUTHOR

...view details