தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல - கமல்ஹாசன்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல, அதைத் தனியார் வசம் ஒப்படைத்து விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

makkal needhi maiam statement
makkal needhi maiam statement

By

Published : Feb 2, 2021, 6:38 PM IST

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அரசே மதுபான விற்பனையை எடுத்து நடத்தி வருகிறது. இதனால் 18 வயது கீழ் உள்ளவர்களும் மது அருந்தும் அவலநிலை இருந்து வருகிறது. இந்நிலையில் சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல அதை தனியார் வசம் ஒப்படைத்து விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார். குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார்.

குடிமைப்பணி அலுவலர்களை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்காண கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகாளக மாற்றி இருக்கிறது இந்த அரசு. சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்“ என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சாராய ஊறலை அழித்து கள்ளக்குறிச்சி போலீஸார் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details