தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை போல் நகர சபை வேண்டும் - மநீம கமல் ஹாசன் - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கமல்ஹாசன் பேச்சு

கிராம சபைபோல் நகர சபை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தலைமைச் செயலர் இறையன்புவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மநீம கமல்ஹாசன்
மநீம கமல்ஹாசன்

By

Published : Feb 21, 2022, 6:30 PM IST

Updated : Feb 21, 2022, 10:11 PM IST

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் இறையன்புவை இன்று (பிப்ரவரி 21) சந்தித்துப் பேசினார். அப்போது, கிராம சபை கூட்டங்களைப் போல் நகர சபை கூட்டங்களை நடத்த வேண்டும் எனக் கோரிக்கைவைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "50 விழுக்காடு மக்கள் தொகை நகரத்தைச் சுற்றி உள்ளார்கள். கிராம சபைபோல் நகர சபை உருவாக்க வேண்டும். 2010ஆம் ஆண்டில் சட்டமியற்றி அரசிதழில் நகர சபை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மநீம கமல் ஹாசன் பேட்டி

எங்களது போராட்டம் அறவழியில்தான் இருக்கும். சரிவரச் செயல்படாத அரசை செயல்படவைக்க வேண்டும் அல்லது அரசை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். நகர வார்டு சபைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய சந்திப்பின் சாராம்சம்.

ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு வார்டிலும் நகர சபை அமைக்கப்பட வேண்டும். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் நமக்கு எதுக்கு என ஒதுங்கிவிட்டனர், நோட்டாவும் நீக்கிவிட்டார்கள். கடந்த 50 ஆண்டுகால ஆட்சியாளர்கள் மீதான சலிப்பு மக்கள் மத்தியில் இருப்பதால், வாக்களிக்க மக்கள் வரும் விகிதம் குறைவாக இருந்தது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க மண்வெட்டியோடு வந்துவிட்டார்கள்" என விமர்சித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் மேகேதாது பாதயாத்திரை - நாள் குறித்த காங்கிரஸ்

Last Updated : Feb 21, 2022, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details