சென்னை:மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாகவும், நிர்வாகிகளை ஊக்கப்படுத்தவும் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் நிர்வாகிகள் மண்டல வாரியாக ஆலோசனைக் கூடங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்தகட்டமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள கமல்ஹாசன்
மநீம தலைவர் கமல்ஹாசன் செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன்
முதற்கட்டமாக வரும் 17, 18 ஆகிய தேதிகளில், கோவை மாவட்டத்தில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு கட்சியின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை தேர்ந்தெடுத்து, கமல்ஹாசன் தலைமையில் "மய்யம் மகளிர் சாதனையாளர் விருது 2022" வழங்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ படத்தில் நயன்தாராவின் லுக் வெளியானது