தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையற்ற ஆட்சி நடைபெறுவதாக கமல் குற்றச்சாட்டு - சானிட்டரி நாப்கீன் விழிப்புணர்வு

சென்னை: தற்போது நடந்து வரும் ஆட்சி சமூகத்திற்குத் தேவையற்ற ஆட்சி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தமிழ்நாடு அரசை சாடியுள்ளார்.

Makkal Needhi Maiam Chief Kamal Hassan launched a campaign- UNSTAIN-

By

Published : Oct 4, 2019, 7:40 AM IST

அன்ஸ்டெய்ன் நோமோர் கரை (UNSTAIN #NoMorekarai) என்னும் நாடு தழுவிய சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு இயக்கத்தை மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல் ஹாசன் நேற்று சென்னையில் தொடக்கி வைத்தார்.

இது தொடர்பாக கமல் ஹாசன் பேசுகையில், கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள் மாதவிடாய் காரணமாகக் கல்வியை இழந்து வருகிறார்கள் என்பதை கருத்தில்கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆவண செய்யவே மக்கள் நீதி மய்யம் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியுள்ளது என்றார்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அரசிடம் எந்த விதத்தில் கொண்டு சென்றாலும் பயனில்லை. அவர்கள் வாய்ச்சொல்லில் வீரர்கள் என தமிழ்நாடு அரசை விமர்சித்துள்ளார்.

அன்ஸ்டைன் நோமோர் கரை சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு

கரை வேட்டி குறித்த அமைச்சர் ஜெயகுமாரின் கருத்திற்கு அவர் போட்டி, பொறாமையில் பேசிவருவதாகவும், அவரை ஒரு வியாபரியாகவே தான் பார்ப்பதாகவும், தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மக்களுக்கு தேவையற்றது எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:'டெங்கு காய்ச்சலால் யாரும் அச்சமடைய வேண்டாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details