தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது! - chennai

மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும் குறைந்தபட்ச ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் ஆளுநர்  ரவியை வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையினை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை சின்னமலையில் நடத்தினர்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

By

Published : May 17, 2022, 6:02 PM IST

சென்னை: சைதாப்பேட்டை சாலையில் சின்னமலை என்னும் பகுதியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக சுமார் ஒன்றரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜூ, 'தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொறுப்பேற்ற நாள் முதல் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மக்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி அளிக்காமல் உள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நிர்வாக குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அதிகாரங்களைக் கொண்ட ஒரு போட்டி அரசியல் நடத்துவது போல் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. எனவே, தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தும் மாநில உரிமைகளையும் அம்மாநில மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதையும் கண்டிக்கிறோம்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜூ

மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச ஜனநாயகத்தை பாதுகாக்கவும் ஆளுநர் ரவி வெளியேறிவிட வேண்டும். ஆளுநர் பதவி நிரந்தரமாகவே ஒழிக்கும் வரை மக்கள் அதிகாரம் மையம் போராடும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிற மாநிலங்களில் தமிழை 3ஆவது மொழியாக்க முயற்சி செய்வேன் - ஆர்.என்.ரவி பேச்சு

ABOUT THE AUTHOR

...view details