சென்னை:ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு, நாள்தோறும் தவறாமல் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதற்கிடையில் நேற்று (மார்ச்.29) குஷ்புவுக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
’பெருவாரியான வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்கள்’ - கடைகடையாக ஏறி இறங்கும் குஷ்பு! - ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு
ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு, தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்குமாறு அத்தொகுதியில் உள்ள அனைத்துக் கடைகளுக்கும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
![’பெருவாரியான வித்தியாசத்தில் ஜெயிக்க வையுங்கள்’ - கடைகடையாக ஏறி இறங்கும் குஷ்பு! make win by a large margin thousand light bjp candidate kushboo collecting votes](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11210301-632-11210301-1617088727324.jpg)
இந்த நிலையில் இன்று (மார்ச்.30) ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உள்பட்ட மாம்பலம் மெயின் ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, சோலை மாமணி தெரு, பாலு முதலி தெரு, லாலா தோட்டம் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டார். நடுவே, கைக்குழந்தையை தூக்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டி, அப்படியே தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து, மாம்பலம் பிரதான சாலை பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்ற குஷ்பு, அங்கிருந்த காய்கறி, மீன் இறைச்சி விற்பனைக் கடை, டீக்கடை என அனைத்து கடைகளுக்கும் சென்று பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி மக்களிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு முன்னதாக வாக்கு சேகரிக்கச் சென்ற குஷ்புவை ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.