சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 பதவிகளில் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உள்ளிட்ட 92 காலி பணியிடங்களுக்கான தேர்வை 2022 நவம்பர் 19ஆம் தேதி நடத்தியது. முதல் நிலைத் தேர்வினை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.
இதன் முடிவுகள் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் எழுதுவதற்கு ஒரு பணியிடத்திற்கு 20 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர். முதன்மைத் தேர்வு எழுதவுள்ள நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆவணங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.
இது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய்யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''குரூப் 1 தேர்வு முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள் மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.