அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி - anna library
சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தான் முதல் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிப்பின்றி உள்ளது. புணரமைக்கப்பட்டு புத்துயிர் பெறும்.
கல்வி தொலைக்காட்சி தொடர்ந்து செயல்படும் அதை நிறுத்த மாட்டோம். சிறப்பாக உள்ளது. மேலும் அதை எப்படி புதுமையாக மாற்ற முடியும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். " என தெரிவித்துள்ளார்.