தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாவீர் நிர்வாண் தினம் - இறைச்சி கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு! - சென்னை செய்திகள்

சென்னை: மகாவீர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் 28ஆம் தேதி  அனைத்து இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Mahaveer Nirwan Day

By

Published : Oct 25, 2019, 4:03 PM IST

மகாவீர் நிர்வாண் தினம் நாடு முழுவதும் வரும் அக்டோபர் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதார துறையின் கீழ் செயல்படும் இறைச்சி கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அன்றைய தினம் சென்னையில் செயல்படும் அனைத்து ஆடு, மாடு மற்றும் பிற இறைச்சி விற்பனை செய்யும் இறைச்சி கூடங்களிலும், அங்காடி, வணிக வளாகத்திலும் இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: லண்டன் ட்ரக்கில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்

ABOUT THE AUTHOR

...view details