தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலைத் திட்டம்: 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு தொடரலாம் - tamilnadu government update news

சென்னை: உள்ளாட்சித் துறையின் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் 50 விழுக்காடு பணியாளர்களை கொண்டு பணியை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

tamilnadu government
tamilnadu government

By

Published : May 17, 2020, 1:22 PM IST

இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், "நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள துணிநூல் தொழிற்சாலைகள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் சுழற்சி முறையில் செயல்படலாம். அவ்வாறு செயல்படும் தொழிற்சாலைகள் ஏற்கனவே அரசு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் அனைத்தும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல் மகாத்மா காந்தி 100 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழும் 50 விழுக்காடு பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். ஏற்கனவே ஊரடங்கினால் 33 விழுக்காடு பணியாளர்களுடன் 100 நாள் வேலை நடைபெற்றது. அதையடுத்து தற்போது 50 விழுக்காடு பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:முடிதிருத்துவோர் நல வாரிய உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details