சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சேத்துப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியராக ஆனந்த் என்பவர் மீது அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் முன்வைத்துள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் மற்றொரு சென்னை ஆசிரியர்! - பிஎஸ்பிபி
பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானதை அடுத்து, சென்னையைச் சேர்ந்த மற்றொரு வணிகவியல் ஆசிரியரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் மற்றொரு சென்னை ஆசிரியர்
பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட மாணவிகள் பலரும் தற்போது பொதுவெளியில் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உஷாரான ராஜகோபாலன்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்