மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சேத்துப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியரான ஆனந்த் என்பவர் மீது அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டை சமூக வலைத்தளங்களில் முன்வைத்துள்ளார். இதனையடுத்து, ஆசிரியர் ஆனந்த் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை! - sexual harrasement case
சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பாலியல்
இவ்விவகாரம் குறித்து பேசிய பள்ளி நிர்வாகம், " ஆசிரியர் ஆனந்த் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக, துறை ரீதியான விசாரணை நடைப்பெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.