சென்னை:மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிழங்கு சரவணன்(41). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலைவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு (அக்-11) வானகரம் பகுதியில் சரவணன் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், கிழங்கு சரவணனை வழிமறித்து சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் கிழங்கு சரவணன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி உள்ளார். பின்னர், அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளது.
இதனையடுத்து, இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்த கிழங்கு சரவணனை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிழங்கு சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.