தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிறுமி பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'

சென்னை: மதுரவாயலில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்தவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

மதுரவாயல் பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய மாதர் சங்கத்தினர் கோரிக்கை.!
மதுரவாயல் பாலியல் வன்புணர்வு, கொலை வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய மாதர் சங்கத்தினர் கோரிக்கை.!

By

Published : Sep 4, 2020, 7:52 PM IST

சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமியை அதே குடியிருப்பில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் பாலியல் வன்புணர்வு செய்து மூன்றாவது மாடியில் இருந்து சிறுமியை தூக்கி வீசி கொலை செய்தார்.

இந்த வழக்கில் காவல் துறையினர், சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் இந்த சம்பவம் நடைபெற்று ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் மதுரவாயல் காவல் துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் குற்றவாளி சுரேஷ் நிபந்தனையற்ற பிணையில் வெளியே வந்துள்ளார்.

இது தொடர்பாக சுரேஷ் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் மாதர் சங்கத்தினர், சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க வந்தனர். ஆனால் புகாரை அளிக்க காவல் துறையினர் உள்ளே அனுமதிக்காததால் காவல் துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனநாயக மாதர் சங்க தென்சென்னை மாவட்ட செயலாளர் சித்ரகலா கூறுகையில், “ஏற்கனவே இதே போன்று ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த தஷ்வந்த் என்பவர் தனது தாயையும் கொலை செய்தார். அதே போல் மதுரவாயல் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி வெளியே வந்திருக்கும் சுரேஷ் என்பவர் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

சித்ரகலா, ஜனநாயக மாதர் சங்கம்

இதனால் இறந்த சிறுமியின் பெற்றோருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உடனடியாக சுரேஷ் மீது மதுரவாயல் காவல் துறையினர் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நீண்ட மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இடைக்கால இழப்பீடும் அரசு வழங்கவில்லை எனக் கூறினர். பின்னர் நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மாதர் சங்கத்தினரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க அனுமதித்தனர்.

இதையும் படிங்க...இருதரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details