தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'என்னுடன் மோத வேண்டாம்' - திருச்சி சூர்யா சிவாவிற்கு வரிச்சியூர் செல்வம் பதிலடி - in Gayathri Raghuram issue

தன்னிடம் ரவுடி வரிச்சியூர் செல்வம் தான் மன்னிப்புக் கேட்டார் என திருச்சி சூர்யா சிவா செய்தியாளர் சந்திப்பில் கூறிய நிலையில், வரிச்சியூர் செல்வம், சூர்ய சிவா என்னுடன் மோதுவது நல்லதல்ல எனப் பதிலளித்துள்ளார். மேலும், நானும் நடிகை காயத்ரி ரகுராமும் ஒன்றாக போட்டோ எடுத்தது குறித்து ஏன் அவதூறு பரப்புகிறார்? என கேள்வியெழுப்பினார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 14, 2023, 6:40 PM IST

Updated : Feb 14, 2023, 7:03 PM IST

'என்னுடன் மோத வேண்டாம்' - திருச்சி சூர்யா சிவாவிற்கு வரிச்சியூர் செல்வம் பதிலடி

சென்னை:சூர்ய சிவா என்னுடன் மோதுவது நல்லதல்ல என்றும்; அவர் என்னுடன் மோதும் அளவிற்கு தகுதியானவரும் இல்லை என்றும் மதுரை வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், என்னை தயவு செய்து ரவுடி என அழைக்கவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

சமீபத்தில் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சிவா(Trichy Surya Siva), வரிச்சியூர் செல்வத்திற்கு எதிராக ஆடியோ வெளியிட்டதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் இன்று (பிப்.14) சென்னை தியாகராய நகரில் மதுரை வரிச்சியூர் செல்வம் (Rowdy Varichiyur Selvam) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'அண்ணன் திருச்சி சிவா மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. ஆனால் சூர்யா சிவா ஏன் இவ்வாறு பேசி வருகிறார் எனத் தெரியவில்லை. அவர் என்னுடன் மோதும் அளவிற்கு தகுதியானவர் இல்லை. நான் மலை என்றால், அவர் முட்டை; நான் கழுகு என்றால், அவர் காக்கா. அவர் என்னை ரவுடி என அழைக்கிறார். அவர் கூட சமீபத்தில் பேருந்து திருடினார். அதனால், அவரை 'நான் பஸ் திருடன் சிவா' என அழைக்கலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் ’நானும் நடிகை காயத்ரி ரகுராமும் (Gayathri Raghuram) போட்டோ எடுத்தது பற்றி ஏன் அவதூறு பரப்பி வருகிறார்?’ என ஆபாசமாக பொருள்படும்படி காட்டமாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து ரவுடி வரிச்சியூர் செல்வம், 'அவர் எப்போதும் பெண்களுடன் தான் சண்டையிடுவார். அவர் என்னுடன் சண்டை போடும் அளவிற்குத் தகுதியானவர் இல்லை. நான் தமிழ்நாட்டில் இல்லாத ஜெயிலே இல்லை. மேலும், நான்கு மாநிலங்களின் ஜெயிலில் இருந்துள்ளேன். அதனுடன் 6 என்கவுன்ட்டர்களில் இருந்து தப்பி வாழ்ந்து வருபவன்' எனப் பெருமையாக கூறினார்.

ரவுடிசத்தை விட்டுவிட்டேன்: அதனுடன் சூர்யா சிவா அவருக்கு வாட்ஸ்அப்பில் பேசி அனுப்பிய ஆடியோ பதிவையும் காண்பித்தார். அப்போது, 'சூர்யா சிவா ஏன் இப்போது மாற்றி பேசுகிறார் எனத் தெரியவில்லை. அவர் என்னுடன் மோதுவது நல்லதல்ல. தற்போது என்னை சில செய்தி நிறுவனங்கள் ரவுடி எனப் பெயரிடுகின்றனர். அதை மற்றும் மாற்றி கொள்ளுங்கள். நான் இப்போது அந்த ரவுடிசத்தை விட்டுவிட்டு திருந்தி எனது குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறேன்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. பழைய ரவுடிகள் சுகரில் படுத்துவிட்டனர். ஆனால், இளைஞர்கள் தற்போது கஞ்சா போதையில் பல தவறுகளை செய்கின்றனர். அது மிகவும் ஆபத்தானது. அதனை தடுக்க வேண்டும். மேலும் நான் படத்தில் ஹீரோவாக நடித்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால், நானே படம் ஒன்றை தயாரிக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'வரிச்சியூர் செல்வம் தான் மன்னிப்புக்கேட்டார்... நான் இன்னும் BJP தான்' - திருச்சி சூர்யா அதிரடி

Last Updated : Feb 14, 2023, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details