தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் மதுரை ரயில்வே கோட்டம் - மதுரை ரயில்வே கோட்டம் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டு வரும் நிலையில், காற்றாலை மூலம் மதுரை ரயில்வே கோட்டம் மின்சாரம் தயாரித்து அசத்தி வருகிறது.

Madurai Railway Division produces wind power மதுரை ரயில்வே கோட்டம் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது
Madurai Railway Division produces wind power மதுரை ரயில்வே கோட்டம் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது

By

Published : May 20, 2022, 1:25 PM IST

மதுரை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு அருகில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த காற்றாலை 72 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றாலை மூலம் 2021 - 22 ஆம் ஆண்டில் 25.686 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் 15.412 கோடி ரூபாய் மின்சார செலவு குறைக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மூலம் மின்சாரம்

இந்தக் காற்றாலை மூலம் இதுவரை 80.095 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் 48.057 கோடி ரூபாய் மின்சார செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் 11 கிலோ வோல்ட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, அலுவலக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகளில் 100 கிலோ வோல்ட் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் போட்டோ வோல்டைக் தகடுகள் அமைக்கப்பட்டு சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சூரிய சக்தி மின்சாரம் மூலம் 100 விழுக்காடு பகல் நேர மின்சார தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: உலக பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி: மனைவியுடன் சென்று தொடங்கி வைத்த ஸ்டாலின்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details