தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் நிவாரண நிதி மூலமாக 86 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பில் உதவிகள் - சு. வெங்கடேசன் எம்.பி., தகவல் - கரோனா நிவாரண நிதி

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 86 நபர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அறிக்கை அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதி மூலமாக 86 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பில் உதவி - சு வெங்கடேசன் எம்பி
பிரதமர் நிவாரண நிதி மூலமாக 86 பேருக்கு ரூ.2 கோடி மதிப்பில் உதவி - சு வெங்கடேசன் எம்பி

By

Published : Jan 2, 2022, 3:40 PM IST

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 86 நபர்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தீவிர நோய்கள் என அறியப்படுபவைக்கும் , தனிநபரால் தாங்க இயலாத நிதிச்சுமையை ஏற்படுத்தும் மருத்துவத் தேவைகளுக்கும் உதவுவது மிக அடிப்படையானது.

பிரதமர் நிவாரண நிதிக்கு கோரிக்கை:

அதன்படி, பிரதமர் தேசிய நிவாரண நிதியின்கீழ், கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட நாள் முதல் ஏராளமானோர் மருத்துவ உதவி கோரி விண்ணப்பங்களை அளித்து வந்தனர்.

அந்த விண்ணப்பங்களுக்கு மருத்துவ நிவாரணத்தினை ஒன்றிய அரசிடம் கோரிப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு 45 பேரும் , கரோனா ஊரடங்கு காலமான 2020ஆம் ஆண்டு 37 பேரும், 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 54 பேர் எனவும் மொத்தம் 136 பேர் இந்தக் காலத்தில் அலுவலகத்தில் உதவி கோரியிருந்தனர்.

அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் மருத்துவ நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

2 கோடிக்கும் மேல் உதவித்தொகை:

அதன் அடிப்படையில் இதுவரை 86 பேருக்கு 2 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரத்து ஐநுாறு ரூபாய் உதவித்தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு நோயாளிக்கும் 2 லட்சத்து 36 ஆயிரத்து ஐநுாறு ரூபாய் இதுவரை பெறப்பட்டுள்ளது. இன்னும் 50 மனுக்களுக்கு உதவித்தொகை வரவேண்டி உள்ளது.

உரிய மருத்துவக் காப்பீடுகளும், சிகிச்சைகளும் நம் தேசத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் முழுமையாக கிடைத்திடும் வரையில், இதுபோன்ற மருத்துவ நிவாரண உதவிகள் அதிகமான அளவிலும், உடனுக்குடனும் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details