சென்னை:மத்திய அரசு இந்தியாவின் பண்பாட்டு மற்றும் தொன்மையை ஆராய 16 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அந்த குழுவில் தென் இந்தியா, வடகிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள், சிறுபான்மை, தலித், பெண் என யாரும் இடம் பெறவில்லை. குழுவில் இந்து உயர் ஜாதி வகுப்பை சார்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
குழுவில், இந்தியாவில் தமிழ் உள்பட செம்மொழி என மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மொழிகளின் அறிஞர்கள் இல்லை. ஆனால் ஜாதி சங்கத் தலைவர் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் பன்முகத்தன்மையை, வரலாற்றை பிரதிபலிக்க கூடியதாக அந்தக் குழு இல்லை.
அந்தக் குழு எழுத போகும் வரலாறு ஏற்கனவே சொல்லப்படும் புரணங்கள் தான் இந்தியாவின் வரலாறு என மாற்றி எழுத வாய்ப்பு உள்ளது. எனவே குழுவை கலைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினோம்.