மதுரை:கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிதணிக்கைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டுமுதல் துணைவேந்தராகப் பணியாற்றிவரும் சூரப்பா மீது இணையதளம் மூலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்து 13 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துணைவேந்தர் சூரப்பா தனது மகளை சட்டவிரோதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரி உள்பட அனைத்து தகவல்களும் தவறானதாக உள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைக் கலங்கப்படுத்துவதாகவும் அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களைக் கலங்கப்படுத்துவதாகவும் உள்ளது.