தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனை போலி என்கவுன்டரில் இருந்து பாதுகாக்க உத்தரவிடக் கோரி தாய் மனு - madurai HC on fake encounter of youth in madurai

மதுரை: மகனை போலி என்கவுன்டரில் இருந்து பாதுகாக்க உத்தரவிடக் கோரி பெண் அளித்த மனு மீது தமிழ்நாடு காவல்துறை தலைவர், நெல்லை மாவட்ட சிறை துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai HC on fake encounter of youth
madurai HC on fake encounter of youth

By

Published : Feb 17, 2021, 9:20 PM IST

பெங்களூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், "எனது மகன் ரகுவரன் பெங்களூரூ பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் உத்தரவின்பேரில் பெங்களூர் காவல்துறையினர் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர். மேலும் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கில் ஒன்றில் கைது செய்யப்பட்டு தற்போது பாளையங்கோட்டை சிறையில் எனது மகன் இருந்துவருகிறார். இந்த வழக்கில் முன்பிணை கோருவது சம்பந்தமாக எனது வழக்கறிஞர், சிறையிலுள்ள எனது மகனை சந்தித்தபோது தன்னை பாளையங்கோட்டை சிறையிலிருந்து கர்நாடகா சிறைக்கு மாற்றும்போது என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனது மகன், அவரது நண்பர்கள் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் சூழலில் எனது மகனின் நண்பர் பாரத்குமார் கர்நாடக காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். அதேபோல தன்னையும் என்கவுன்டர் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே எனது மகனை போலி என்கவுன்டரில் இருந்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனு குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைவர், நெல்லை மாவட்ட சிறைத்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.

ABOUT THE AUTHOR

...view details