தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக எம்எல்ஏ மூர்த்திக்கு முன் பிணை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - madurai dmk mla murthy

சென்னை: மதுரையில் பாஜக நிர்வாகியை செருப்பால் தாக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ மூர்த்திக்கு நிபந்தனை முன் பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai
chennai

By

Published : Jul 2, 2020, 3:21 PM IST

மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகியும், மருத்துவருமான சங்கரபாண்டியன் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இதனால், கோபமடைந்த மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி, கடந்த 22ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனோடு, சங்கரபாண்டியனையும் அவரது மனைவியையும் செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியானது. மேலும், இச்சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் பிணை வழங்கக்கோரி திமுக எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன், திமுக எம்எல்ஏ மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் பாஜக நிர்வாகி சங்கரபாண்டியனை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக சிசிடிவி ஆதாரங்கள் உள்ளது. தகாத வார்த்தைகளால் திட்டியதோடு தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக சங்கர பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில்,மதுரை ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி சதீஷ்குமார், அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்திக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:’தகாத வார்த்தைகளில் பேசக்கூட தயங்கமாட்டார்’: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் குறித்து வெளிவரும் பகீர் தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details