தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவில் இருந்து மீண்டு நீதிமன்றம் திரும்பும் தலைமை நீதிபதி - chennai highcourt

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி 25 நாட்களுக்கு பிறகு நாளை (டிசம்பர் 01) முதல் மீண்டும் வழக்குகளை விசாரிக்கிறார்.

Madrasa highcourt CJ resume his work from court after COVID pandemic
Madrasa highcourt CJ resume his work from court after COVID pandemic

By

Published : Nov 30, 2020, 10:28 PM IST

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் 150 நாட்களுக்கும் மேலாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து, வைரஸ் பரவல் குறைந்ததும் கடந்த இரண்டு மாதங்களாக நீதிமன்ற அறைகளில் குறிப்பிட்ட விதிமுறைகளுடன் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நவம்பர் 4ஆம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி, கடந்த சில தினங்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்தி கொண்டார்.

தற்போது, தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில், 25 நாட்களுக்கு பிறகு நாளை (டிசம்பர் 01) முதல் நீதிமன்றத்தில் இருந்து வழக்குகளை விசாரிக்க உள்ளார் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஓய்வுபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details