தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்டம் நடத்தும் மாணவர்களை மிரட்டும் கல்லூரி நிர்வாகம் - மாணவர்கள் குற்றச்சாட்டு - அம்பேத்கர், பெரியார் வாசகர் அமைப்பு

சென்னை: மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவரை மிரட்டிய கல்லூரி முதல்வர் மற்றும் துணைத்தலைவரை கண்டித்து அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

chennai university students

By

Published : Oct 18, 2019, 6:32 PM IST

Updated : Oct 18, 2019, 6:43 PM IST

சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட அமைப்பைச் சார்ந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து மாணவர் பச்சைமுத்து பேசுகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரியில் புதிதாக கட்டியுள்ள விடுதிக்கு வைப்புத்தொகை (Deposit) ஏற்றப்பட்டது. கட்டணத்தை ஏற்றியது தவறில்லை. ஆனால், போதிய வசதிகள் விடுதியில் இல்லை.

அதனை சரி செய்து தருமாறு கேட்ட மாணவரை கல்லூரி தலைவர், துணைத் தலைவர் சேர்ந்து மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதற்கு தற்போது வரை வருத்தம் கூட கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மேலும், அந்த மாணவருக்கு ஆதரவாக போராடிய மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் மிரட்டியுள்ளது. இதனைக் கண்டித்து தற்போது நாங்கள் போராட்டம் நடத்திவருகின்றோம். கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் இவ்வாறு செயல்பட்டால் உயர் கல்வித் துறையிடம் மனு அளிப்போம் என்றும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை: மூன்று கால்வாய்களில் பாசன நீர் திறப்பு!

Last Updated : Oct 18, 2019, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details