தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியர் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செமஸ்டர் தேர்வு! - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி தெரிவித்தார்.

semester exam announcement  madras university semester exam announcement  madras university  semester exam  செமஸ்டர் தேர்வு  அரியர் தேர்வு  சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு  ஞாயிற்று கிழமைகளிலும் செமஸ்டர் தேர்வு
சென்னை பல்கலைக்கழகம்

By

Published : Feb 4, 2022, 10:50 PM IST

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு பருவத்தேர்வுகள் இன்று (பிப். 4) முதல் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்வு கால அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பருவத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலதாமதம் ஏற்பட்டதால், விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளும் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறுகையில், “மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்தல் நடத்தப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வு நடத்தப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கும்படி உயர் கல்வித்துறை உத்தரவிட்டதன் பேரிலேயே ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. அரியர் மாணவர்கள் தவிர, நடப்புக் கல்வியாண்டில் படிக்கும் பிற மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்வு இல்லை” என்றார்.

இதையும் படிங்க: 'இலவு காத்த கிளி யார்?'-ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்

ABOUT THE AUTHOR

...view details