சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிய வரலாறு, தொல்லியல் துறையில் மூன்று பட்டியலின பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை பழிவாங்கும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்டியலின அமைப்பைச் சேர்ந்த லட்சுமணன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசிய லட்சுமணன், "தொல்லியல் துறையில் பணிபுரியும் பேராசிரியர் சௌந்தர் ராஜனுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என்பதற்காக மாணவர்கள் மூலம் பிரச்னைகள் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.