சென்னைப் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் 2021 ஆண்டிற்கான பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை , முதுகலை , முதுகலை கணினி பயன்பாடு , முதுகலை பட்டயப்படிப்பு, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு, முதுகலை வணிக நிர்வாகவியல் ஆகியவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
இந்தப் படிப்புகளில் சேர, தொலைதூரக் கல்வி விருப்பமுள்ள நிறுவனத்திலுள்ள மாணவர்கள் ஒற்றைச் சாளர இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர் சேர்க்கை மையத்தின் மூலமாக சேர்ந்து பயனடையலாம். இந்த மையம் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு உட்பட அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து, அனைத்து நாட்களிலும் செயல்படும்.