சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில், கலை, அறிவியல் பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகள் எம்.பி.ஏ, இளநிலை, முதுகலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், தொலைதூரக் கல்வி நிறுவனம் வாயிலாக ஜூன் மாதம் நடைபெறும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
தொலைதூரக் கல்வி கட்டணத்திற்கான தேதி அறிவிப்பு! - சென்னை பல்கலை தொலைதூர கல்வி மையம்
சென்னை: தொலைதூரக் கல்வி முறை வாயிலாக பயின்றுவரும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய தேதியை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
madras university
தற்போது, ஜூன் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. www.ideunom.ac .in என்ற இணையதளம் மூலம் நாளை(ஆக.7) முதல் 21ஆம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம். மேலும் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை விண்ணப்பம் செலுத்தும் நபர்கள் அபராத தொகையுடன் தேர்வுக்கு விண்ணப்பங்களை செலுத்த வேண்டும் என, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் 900 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் சென்டர் - முதலமைச்சர் நேரில் ஆய்வு