தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

162ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு - பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 162ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

madras university convocation

By

Published : Nov 19, 2019, 1:24 PM IST

சென்னை பல்கலைக்கழகத்தின் 162ஆவது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இருவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களையும் 701 பேருக்கு முனைவர் பட்டங்களையும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

162ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பு

இந்தப் பட்டமளிப்பு விழாவில் நேரடியாகவும் தொலைதூரக் கல்வி வாயிலாகவும் படித்த மாணவர்கள் 94 ஆயிரத்து 190 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ராமசாமி சிறப்புரையாற்றினார். சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details