தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை பல்கலைக்கழகம்: செப் 10க்குள் இளநிலை சேர்க்கையை முடிக்க உத்தரவு! - madras university admission last date

சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 10 க்குள் மாணவர் சேர்க்கை  சென்னைப் பல்கலைக் கழகம்  மாணவர் சேர்க்கை  இளநிலை மாணவர் சேர்க்கை  madras university admission  madras university admission last date  madras university admission online claass
சென்னைப் பல்கலைக்கழகம்: செப்-10க்குள் இளநிலை சேர்க்கையை முடிக்க உத்தரவு

By

Published : Jul 31, 2020, 8:57 AM IST

இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "2020-21ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இளங்கலை பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்சிஏ பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தொடங்கவேண்டும். ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வேண்டும். இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும்.

தனியார் கல்லூரி நிர்வாகங்கள், வகுப்புகளை எடுப்பதற்கு பேராசிரியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். அதேபோன்று வகுப்பு தேர்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றையும் ஆன்லைனில் நடத்தவேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:பிளஸ் 1 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details