தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் புத்துயிர் பெறும் ’மெட்ராஸ் பங்கு சந்தை’ - v. Nagappan

சென்னை: நாட்டின் நான்காவது பெரிய பங்கு சந்தையான ’மெட்ராஸ் பங்கு சந்தை’ மீண்டும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதுப்புது வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

madras
madras

By

Published : Jan 10, 2020, 8:15 PM IST

80 ஆண்டுகள் பழமையானதும், நாட்டின் நான்காவது பெரிய பங்கு சந்தையாகவும் திகழ்ந்த மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்று அழைக்கப்படும் ’மெட்ராஸ் பங்கு சந்தை’. காலப்போக்கில் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டது. இது தென்னிந்தியாவின் முதல் பங்கு சந்தையாகும்.

புதிய செயலி தொடக்கம்

மெட்ராஸ் பங்கு சந்தை தற்போது ’மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் துணை நிறுவனமான ’எம்எல்இ ஃபைனான்சியல் சர்வீஸ்’ நிறுவனம் நவீன தொழில்நுட்பத்துடன் இணைய முதலீட்டு சேவையில் இறங்கியுள்ளது. இதற்காக ’டெயிலி காங் (DailyGong) ’ என்ற செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மும்பை தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும்.

இதுதொடர்பாக மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவன இயக்குநர் வ.நாகப்பன் ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "டிவிஎஸ், மெட்ராஸ் சிமென்ட், அஷோக் லேலாண்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ’மெட்ராஸ் பங்கு சந்தை’ மூலமாகவே நிதியை திரட்டினர். தென்னிந்தியா இன்று மிகப்பெரிய தொழில் பகுதியாக இருப்பதற்கு ’மெட்ராஸ் பங்கு சந்தை’ ஒரு முக்கிய காரணம்.

’செபி’ முடிவால் விலகினோம்

மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை உள்ளிட்ட தேசிய அளவிலான பங்கு சந்தைகள் வளர்ந்த பிறகு பிராந்திய பங்கு சந்தைகளுக்கு தேவையில்லை என 2015இல் பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமான ’செபி’ முடிவு செய்தது. அதனடிப்படையில் பங்கு சந்தையிலிருந்து விலகினோம். தற்போது எங்களது முதலீட்டாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கும் விதமாக எம்எல்இ ஃபைனான்சியல் சர்வீஸ் செயல்படுகிறது.

மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவன இயக்குநர் வ. நாகப்பன்

இதில், இணைய வழி பங்கு வர்த்தகத்தை மேற்கொள்ள ’டெயிலி காங்’ என்ற செயலியை உருவாக்கியுள்ளோம். இங்கு பங்குச் சந்தையில் மட்டுமல்லாமல் மியூச்சுல் ஃபண்ட், கமாடிட்டி சந்தை, செலாவணி சந்தை ஆகியவற்றிலும் முதலீடு செய்யமுடியும். மற்ற பிராந்திய பங்குச் சந்தைகளின் துணை நிறுவனங்களைவிட தொழில்நுட்பத்தில், அதிக அளவில் முதலீடு செய்துள்ளோம். முதல் முறையாக முதலீடு செய்பவர்களுக்கு, சேமிப்பு, முதலீடு, பங்குச் சந்தை ஆகியவை குறித்து தெளிவாக விளக்குகிறோம்.

தமிழிலேயே பயிற்சி வகுப்புகள்

அதேபோல் முதல் முறையாக முதலீடு செய்பவர்களுக்கு தமிழிலேயே பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் அவர்கள் எளிமையாக வர்த்தகம் செய்ய முடியும்" என்று கூறினார். இந்த புதிய சேவை மூலம் 80 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ’மெட்ராஸ் பங்குச் சந்தை’ தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது எனலாம்.” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்னோவா கிரிஸ்ட்டா பிஎஸ்-6 மாடல் முன்பதிவு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details