தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் ஊழியர்கள் பணிநீக்கம்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை - Aavin recruitment

ஆவின் நிறுவனத்தில் எவ்வித நோட்டீஸும் அளிக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்
ஆவின் பணி நீக்கத்திற்கு இடைக்கால தடை - உயர் நீதிமன்றம்

By

Published : Jan 11, 2023, 2:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு, முந்தைய அதிமுக ஆட்சியில் தேர்வு ஏதும் நடத்தப்படாமல், 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியற்றவர்களுக்குப் பணி வழங்கியதாகப் புகார்கள் எழுந்தது.

பின்னர் இதுதொடர்பாக திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி மற்றும் சென்னை ஆகிய பால் உற்பத்தியாளர் சங்கங்களில், ஆவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு மற்றும் பால் வள துணைப் பதிவாளர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 26 அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட கே.பவ்னீத் சூர்யா, எம்.ராஜசேகர் மற்றும் டி.ஏழுமலை உள்ளிட்ட 25 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘அனைத்து தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு நியமிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் நீடிக்கும் நிலையில், எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்துள்ளார்கள்.

பணி நீக்கம் செய்ய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், ஒன்றிய தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் எந்த அதிகாரமும் இல்லாமல், ஒன்றியத்தின் பொது மேலாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் பணி நீக்க உத்தரவுக்குத் தடை விதித்து, பணியில் தொடர அனுமதிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “எந்த நோட்டீசும் அளிக்காமல் பணி நீக்கம் செய்தது தவறு. எனவே வழக்கு தொடர்ந்துள்ள 25 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிடப்படுகிறது. ஆகவே இந்த வழக்கின் மீதான விசாரணை மார்ச் 17ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:ஆவின்: முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details