தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்ய நிபந்தனை: உயர்நீதிமன்றம் அதிரடி - அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்ய சிறப்பு தகுதி தேவை

சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்பு தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Madras High Court
தகுதி

By

Published : May 29, 2023, 5:44 PM IST

சென்னை:ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா போன்ற இந்திய மருத்துவமுறைகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளை படித்து, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை தொடர்பான சான்றிதழ் முடித்த மருத்துவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஒலியியல் பரிசோதனைகள் செய்ய அனுமதிக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு ஆயுஷ் ஒலியியல் பரிசோதனையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று(மே.29) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கருவில் இருக்கும் குழந்தை பெண் என்றால், குழந்தைகளை கருவிலேயே அழிக்க துணை செய்வதால் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை முறைக்கு தடை விதிக்க 1994ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் மூலம் குழந்தை ஆணா? பெண்ணா என்பதை தெரிந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், குழந்தை பிறக்கும் வரை குழந்தை என்ன பாலினம் என்பதை ரகசியமாக மருத்துவர்கள் கடைபிடிக்கும் வகையில் சிசு பாலின பரிசோதனை மேற்கொள்ள பல்வேறு சிறப்பு தகுதிகளை மத்திய அரசு வரையறுத்துள்ளதாகவும், அந்த தகுதிகளைப் பெற்ற மருத்துவர்கள் மட்டுமே இந்த பரிசோதனைகளை நடத்த தகுதி உள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்களுக்கான சட்டம் 2018 பிரிவு 32-ன் படி இந்த சிறப்பு தகுதிகளைப் பெறாத மருத்துவர்கள், இச்சோதனைகளை நடத்த தகுதியில்லை எனவும், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் எக்ஸ்ரே, இ.சி.ஜி, உள்ளிட்ட அடிப்படை பயிற்சி மட்டுமே பெற்றுள்ளதாலும், கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைகள் செய்ய தேவையான தகுதியைப் பெறவில்லை என்பதாலும், இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்:அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது, ஒலி அலைகளை பயன்படுத்தி கருப்பையில் இருக்கும் குழந்தையின் படத்தை உருவாக்கி திரையில் காண்பிக்கிறது. இந்த வகை ஸ்கேனில் வலி ஏதும் இருக்காது. அதேபோல், கர்ப்பிணிக்கும் குழந்தைகளுக்கும் எந்த விதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. கர்ப்பத்தின் எந்த காலத்திலும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு அறிவுறுத்தப்படலாம். மருத்துவ காரணங்களுக்காக மருத்துவர் அறிவுறுத்தல்படி மட்டுமே இந்த ஸ்கேனை செய்ய வேண்டும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் 12 வாரங்கள் இருக்கும்போது செய்யப்படுகிறது. கருப்பையில் எத்தனை குழந்தை, உள்ளது? குழந்தையின் நஞ்சுக்கொடியின் நிலை என்ன? என்பதனை இந்த ஸ்கேன் மூலம் பார்க்க முடியும்.

இதையும் படிங்க: அபார்ட்மெண்ட் டிரான்ஸ்பர் கட்டணம் கூடாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

ABOUT THE AUTHOR

...view details