சென்னை: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (AICTE), பல்கலைகழகப் பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65 என்று நிர்ணயித்தது. இதையடுத்து நிபந்தனைகளுடன் ஐந்து ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு வழங்க அனுமதி வழங்கியது.
இந்த விதிகளுக்கு முரணாக 62 வயதிலேயே தங்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கியதாகப் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு எதிராக இரண்டு பேராசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நேற்று (ஏப்ரல்.14) விசாரித்த நீதிபதி பார்த்திபன், "ஏஐசிடிஇ-யின் விதிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களையும் கட்டுப்படுத்தும். கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்ட இரு பேராசிரியர்களையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.
அதேபோல ஏஐசிடிஇ விதிகளுக்கு எதிராக நிர்ணயிக்கப்படும் பணி ஓய்வு செல்லாது. அதை அமல்படுத்த முடியாது. ஏஐசிடிஇ விதிகளே அமல்படுத்தப்பட வேண்டியவை" என தெளிவுபடுத்தினார்.
இதையும் படிங்க: ஏஐசிடிஇ புதிய அறிவிப்பு: கணிதம், வேதியியல் படிக்காதவர்கள் பொறியியல் படிக்க வாய்ப்பு..