சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த பாபு நாயுடு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், “எங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ளது.
இந்த நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். எனவே, புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெகதீஷ்வரி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, “உடல் புதைக்கப்பட்ட நிலம் மனுதாரருக்கு சொந்தமானது அல்ல. அதேநேரம், நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு தான் உடல் புதைக்கப்பட்டது” என வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி தண்டபானி, “உடலை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட, பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது.