சென்னை:நடிகை மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் மிஸ் சென்னை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது அதற்கான அரங்கில் தனியார் நிறுவனம் ஒன்றை பிரபலப்படுத்துவதற்காக, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா பட்டங்களை வென்ற என்னிடம் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சிதா பத்ராத்ரி என்பவர் 50,000 ரூபாய் கொடுத்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பணத்தை திருப்பி தரவில்லை எனவும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் என் மீது 2019ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று (டிச.24) விசாரணைக்கு வந்தது.