தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கை: அதிமுக மனு தள்ளுபடி - அதிமுக மனு தள்ளுபடி

சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசுப் பணியாளர் வேண்டும் அதிமுக மனு தள்ளுபடி
சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசுப் பணியாளர் வேண்டும் அதிமுக மனு தள்ளுபடி

By

Published : Feb 21, 2022, 5:16 PM IST

சென்னை: விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகராட்சி அதிமுக செயலாளர் பொன்.சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், சிவகாசி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் திமுகவினர் முறைகேடுகளிலும், விதிமீறலிலும் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முறையாக வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் திமுகவினரை வெற்றி பெற்றதாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதால், மத்திய அரசுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யவும் மனுவில் கோரியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் காலை முறையீடு செய்யப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசுப் பணியாளர் வேண்டும்
இதையடுத்து, வழக்கு மதியம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவேவாக்கு எண்ணிக்கையின் போது சிசிடிவி பொருத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும், மனுதாரருக்கு திமுகவினரால் மிரட்டல் இருப்பதால், காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details