தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சிலம்பரசனுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! - corona kumar tamil movie case

Corona Kumar movie case: 'கொரோனா குமார்' படத்தில் நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிப்பதற்கு நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேல்ஸ் நிறுவனத்தின கோரியக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிலம்பரசன் நடிக்க தடை விதிக்க கோரிய வழக்கு
சிலம்பரசன் நடிக்க தடை விதிக்க கோரிய வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 10:41 PM IST

சென்னை: வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் 'கொரோனா குமார்' என்ற பெயரில் படம் தயாரிக்க முடிவு செய்து, நடிகர் சிம்புவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாகக் கடந்த 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்டதாகவும்

மேலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததால், 'கொரோனா குமார்' படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க, நடிகர் சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணையின் போது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1 கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதனை அடுத்து, ஒப்பந்தத்தில் உள்ள படி 1 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தைச் செலுத்த சிலம்பரசனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ததற்கான ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதனை அடுத்து, அந்த டெபாசிட் செய்யப்பட்ட தொகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவிட்டார்.

மேலும், 'கொரோனா குமார்' படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வேல்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வெளிநாடு செல்வதற்கோ அல்லது வேறு படங்களில் நடிப்பதற்குத் தடை விதித்தால், மற்ற நிறுவனங்களுடன் தொழில் ரீதியாக அவர் மேற்கொண்ட பணிகள் பாதிக்கும் என நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு: கேரள பெண் ரூ.1 கோடி நஷ்டஈடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details