சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலரும், தற்போதைய மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையருமான நர்மதா நேரில் ஆஜராகி அளித்த அறிக்கையில், “கடந்த 2020ஆம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே தவறானவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் நெம்மிலி, அயக்குளத்தூர் கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 3,64,982 சதுர மீட்டர் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 286 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீட்டில், 247 கோடியே 46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இதில் 38 கோடியே 93 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நீதிபதி சுரேஷ்குமார், “இழப்பீட்டுத் தொகையை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் நிரந்தர வைப்பீடாக செலுத்தும்படி கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.