தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து - ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து

எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகப் பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

By

Published : Nov 30, 2021, 1:14 PM IST

சென்னை: 2015ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாக அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளருக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதைத் தனியார் தொலைக்காட்சி (கலைஞர்) செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் அமிர்தம் மீது அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் நீதிபதி நிர்மல்குமார் இன்று (நவம்பர் 30) தீர்ப்பளிக்கையில், அமிர்தம், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details