சென்னை: கூடுவாஞ்சேரி காரணை புதுச்சேரி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வினோத் என்ற சோட்டா வினோத், மற்றும் ரமேஷ் என்கின்ற இரண்டு ரவுடிகளும் காவல் துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என சோட்டா வினோத்தின் தாயார் ராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், சம்பவத்தன்று வினோத் மற்றும் அவரது நண்பர் ரமேஷ் இருவரும் சிறுசேரியில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கியிருந்ததாகத் தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்து, அங்கு சென்ற காவல் துறையினர், இருவரையும் உணவகத்தில் இருந்து அழைத்துச் சென்று என்கவுண்டரில் கொலை செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரவுடிகள் மீது காவல் துறை நடத்திய என்கவுண்டரை, போலி என்கவுண்டர் எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க:சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் உதவியாளருக்கு சிறை தண்டனை விதித்த உயர் நீதிமன்றம்!