சென்னை :சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு தில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிப்பதாகக் கூறி கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விருது வழங்கும் விழாவை நடத்தியது.
இசை அமைப்பாளர் தேவா, நடிகர் வடிவேலு, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிடோருக்கு கௌரவ முனைவர் பட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஓய்வுப்பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்திநராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
தனியார் அமைப்பு சார்பில் டாக்டர் பட்டம் வழங்கியதும், நிகழ்ச்சிக்கு பல்கலைகழகம் இடம் வழங்கியதும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், கையெழுத்து தவறாக முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மாம்பலம் காவல் நிலையத்திலும் புகார்கள் அளித்தனர். அவற்றில் நிகழ்ச்சி நடத்திய அமைப்பின் இயக்குனரான ராஜு ஹரிஷ், மகாராஜன் உள்ளிட்டோர் மீது 7 பிரிவிகளின் கீழ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதையறிந்த ராஜூ ஹரிஷ் தலைமறைவானார்.