சென்னை:தமிழக வனத்துறை பணிகளுக்கான விதிகளில், வனவிலங்கு உயிரியல் படிப்பை நீக்கிய திருத்ததை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மீண்டும் அந்த படிப்பை சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
வனத்துறையில் காலியாக இருந்த 79 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2010ஆம் ஆண்டு அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், வனத்துறையில் உள்ள பணிகளில் சேர்வதற்கு தகுதியாக, வனவியல் மற்றும் வனவிலங்கு உயிரியல் படிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்த அரசாணையின்படி, முதுநிலை வன உயிரியல் மற்றும் வனவியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள், 'ரேஞ்சர்' எனும் வனச்சரகர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், இது சம்பந்தமான பணிக்கு தகுதியாக, விதியில் திருத்தம் கொண்டு வந்த அரசு, வனவியலை முன்னுரிமை கல்வித் தகுதியாக நிர்ணயித்து, வன விலங்குகள் உயிரியல் படிப்பை நீக்கியது.
இதையும் படிங்க:மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மீண்டும் கோரிக்கை வைத்த ஸ்ரீதர் வாண்டையார்!